நம் பரம்பரை தொடர வேண்டும்... எனக்கு பேத்தி வேண்டாம்.. பேரன் தான் வேணும் - சர்ச்சையில் சிரஞ்சீவி..!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரம்மானந்தம் நடித்த பிரம்மா ஆனந்தம் படத்தில் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது ராம் சரண் மகள் கிளிங்காராவிடம் தொகுப்பாளினி தாத்தாவை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்போது சிரஞ்சீவி வீட்டில் எல்லாம் பெண்களாக இருக்கிறார்கள். சில சமயத்தில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் நான் உணர்கிறேன். இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை கொடு என்று சரணிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்கள் வாரிசை தொடர ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறேன்.
ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயம் இருப்பதாக சிரஞ்சீவி கூறியிருக்கிறார். என் என்னை சுற்றி என் பேத்திகள் இருந்தாலும், அவர்கள் இருப்பது போல் என்னால் உணர முடியவில்லை. குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம்சரணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரம்மானந்தம் பட விழாவில், ராம்சரணிடம் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சர்ச்சையாகவும் வெடித்துள்ளது,
இந்த கருத்தை சிரஞ்சீவி நகைச்சுவையாக பேசி இருந்தாலும் இதை பலர் விமர்சித்து வருகிறார்கள். அதுபோல சிரஞ்சீவிக்கு சுஷ்மிதா, ராம்சரண், ஸ்ரீஜா என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுஷ்மிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்ரீஜாக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.