வெப் சிரீஸுக்கு வந்த ஓவியா..!

 
நடிகை ஓவியா நடிக்கும் வெப் சிரீஸ் மெர்லின்

தமிழில் வெளியான ‘களவாணி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. கேரளாவைச் சேர்ந்த இவர் சொந்த மாநிலத்தை விட தமிழகப் படங்களில் அதிகளவில் நடித்து வந்தார்.

மெரீனா, கலகலப்பு என இவர் நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

முதல் சீசனில் அனைவரும் விரும்பிய போட்டியாளராக இருந்தார். அடுத்தடுத்த சீசன்களிலும் ஓவியா போன்று போட்டியாளர் வேறு யாரேனும் வருவார்களா என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் முன்வைத்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் மீண்டும் ஓவியா பிஸியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அதற்கு மாறாக அவருக்கு வாய்ப்புகள் பெரியளவில் அமையவில்லை. 90 எம்.எல் என்கிற படத்திலும், காஞ்சனா 3-யிலும் மட்டுமே நடித்தார்.

தற்போது யு- ட்யூப் தளத்திற்கான தயாரிக்கப்பட்டு வரும் வெப் சீரிஸில் அவர் நடித்து வருகிறார். இந்த சீரிஸுக்கு மெர்லின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிரீஸ் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

From Around the web