டீசர் மூலம் பா.ரஞ்சித் கேட்கும் கேள்வி..!

 
1

நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’பாட்டில் ராதா’ என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடிக்க அவருடன் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோ குரு சோமசுந்தரம் குடிகாரனாக இருக்கும் நிலையில் இனிமேல் குடித்தால் தாலியை கழட்டி வைத்துவிட்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று கூறும் மனைவி ஒரு பக்கம், குடிக்காமல் தன்னால் இருக்க முடியாது என்று குடிக்கு அடிமையாகி விட்ட நிலைமை இன்னொரு பக்கம் என இரண்டுக்கும் நடுவே அவர் திண்டாடும் காட்சிகள் உள்ளன.

மேலும் ’ஊருக்கு ஊர், தெற்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு குடிக்காதே என்று சொன்னால் எப்படி என்ற கேள்வி கேட்கும் குரு சோமசுந்தரம், நான் சம்பாதித்த காசில் நான் குடிக்கிறேன், என்னை குடிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை’ என்று குடிகாரன் போல் உளறும் காட்சிகளும் உள்ளன.

மொத்தத்தில் தற்போதைய சமூக பிரச்சினையான மது கொடுமையின் தீவிரத்தை இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வருகிறார் என்று மட்டும் தெரிகிறது. இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web