‘தங்கலான்’ படம் குறித்து பா ரஞ்சித் ட்வீட்..!

 
1

‘தங்கலான்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.இந்த நிலையில் டிரைலர் வெளியாகிய சில நாட்களில் அடுத்த அப்டேட்டை பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தின் ’மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி’ என்ற பாடல் நாளை புதன்கிழமை வெளியாக இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

ஜி. பிரகாஷ் இசையில் உருவான இந்த பாடலின் சில வீடியோ காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இந்த பாடலின் வீடியோவின் இறுதியில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு  கிஷோர் குமார் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.


 


 

From Around the web