மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு பத்மவிபூஷன் விருது..!

 
எஸ்.பி.பி. சரண்

பாடும் நிலா என்று இசைத்துறையில் கொண்டாடப்பட்ட மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்குரிய பத்ம விபூஷன் விருதை அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.

அதன்படி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபுஷன் விருது வழங்கப்பட்டது. அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் குடியரசு தலைவரிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார். பாடகர் சரண் விருதை பெறும் போது அரங்கில் இருந்த பலரும் மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யை வாழ்த்தி கரகோஷம் எழுப்பினர்.
 

From Around the web