மீண்டும் சினிமாவில் பிஸியாகும் பத்மப்ரியா..!

 
பத்மப்ரியா

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பத்மப்ரியா அடுத்ததாக தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சேரன் இயக்கத்தில் வெளியான ‘தவமாய் தவமிருந்து’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பத்மப்ரியா. தமிழ் பெண்ணாக இருந்தாலும் மலையாளப் மொழி படங்களில் அதிகளவில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். எனினும் கொஞ்சம் காலகட்டத்துக்கு பிறகு தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்தார்.

தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் பத்மப்ரியா நடிக்கிறார். இதில் விக்ரமுக்கு அவர் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மலையாளத்தில் பிஜுமேனன் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய வரவு மலையாள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

From Around the web