த்ரிஷா பற்றி சில அறிந்திடாத விஷயங்களை பகிர்ந்த பயில்வான்..!
சமீப காலமாக தளபதி விஜய் - த்ரிஷா பற்றி பல்வேறு விதமான வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் த்ரிஷா பற்றி சில அறிந்திடாத விஷயங்களை பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பப்பிளிக் விங்க் என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "என் மகன் இறந்துவிட்டான், படப்பிடிப்புக்கு ஓய்வு என த்ரிஷா அறிவித்தார். கிறிஸ்துமஸ் அன்னைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர் என் மகன் இறந்துவிட்டான், சோகத்தில் மூழ்விட்டேன் என தெரிவித்துள்ளார்,த்ரிஷாவின் வீட்டில் பல நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அதில் ஒரு ஆண் நாய் பெயர் சோரோ. இது வெளிநாட்டு இனத்தை சேர்ந்த நாய். த்ரிஷாவின் படுக்கையில் புகுந்து விளையாடும் நாயாக சோரோ இருந்து வருகிறது. இந்த நாய் கிறிஸ்துமஸ் நாளில் இறந்து விட்டது.,இதற்கு த்ரிஷா, என்னுடைய மகன் சோரோ கிறிஸ்துமஸ் நாளில் இறந்து விட்டான். நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். அதிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் இருக்கிறோம். இதனால் சில நாள் விடுப்பில் இருக்கிறேன் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
விஜய் - த்ரிஷா இடையிலான வதந்தித்ரிஷா ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை போய் திருமணம் ரத்தான விஷயம் அனைவருக்கும் தெரியும். அவரது மிக பெரிய குடுப்பினையாக தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய்யுடனும் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடனும் விரைவில் வர இருக்கும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோர் பயணம் செய்தார்கள்.,இதன் புகைப்படங்கள், விடியோக்கள் வெளியாகின. த்ரிஷா முக்காடு போட்டிருந்தார். விஜய் மாஸ்க் அணிந்திருந்தார். ஆனால் இவர்களின் புகைப்படத்தை யார் எடுத்தார்கள் என்பது கேள்வியாக உள்ளது. இதில் அவர்கள் பயணித்த பிளைட்ல குறித்த விவரங்களும் வெளியிட்டிருந்தார்கள். இதை வைத்து பலரும் குஷியடைந்து வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் த்ரிஷா அதைப்பற்றி கவலைப்படவில்லை.
முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாத்ரிஷாவின் தந்தை ஆந்திரா கிளப்பில் மேனேஜராக பணியாற்றியவர். அந்த சூழ்நிலையில் த்ரிஷா ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நடித்தார். அதன் பிறகு மளமளவென புகழ் ஏணியில் ஏறினார். தெலுங்கு படம் ஒன்றில் த்ரிஷா, சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தார். அப்போது த்ரிஷாவுக்கு சைவ சாப்பாடு சிரஞ்சீவி வீட்டில் இருந்து தான் வந்தது. அவர் அதிகமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிடமாட்டார்.,விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனுடன் இணைந்து தான் கதை கேட்பார். பின்னர் மனைவி சங்கீதாவுடன் இணைந்து கதை கேட்பதும், விவாதிப்பதுமாக இருந்தார். இந்த நடிகைகளுடன் ஜோடி சேர போகிறேன் என சங்கீதாவிடம் சொல்லி அனுபதி பெற்றே நடிப்பார்.
இந்த சூழ்நிலையில் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வரும் தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்யலாம் என சொல்லப்படுகிறது. இது உறுதியான தகவல் இல்லை.,மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. டோவினோ தாமஸ் உடன் அவர் இணைந்து நடித்த ஐடென்டிட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.,பெரியவர்களால் நின்று போன த்ரிஷா திருமணம்த்ரிஷாவின் ஒரிஜினல் பெயர் பலருக்கு தெரியாது. அவரது நிஜப்பெயர் அனு ராதிகா.
த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் திருமணத்துக்கு பின் நடிக்க கூடாது என வருண் மணியன் கூறியுள்ளார். ஆனால் த்ரிஷா தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். இது வருண் மணியன் பெற்றோருக்கு பிடிக்காத நிலையில் த்ரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்ததுடன் நின்றுபோனது. இதுபற்றி த்ரிஷாவின் தாயார் சொல்லும்போது சில நேரங்களில் நினைத்தது நடக்காமல் போகக்கூடும். என் மகளின் திருமணம் நின்றுபோன காரணமும் அப்படிதான். இதில் பல பெரியவர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்றார். அவர்கள் யார் என்று இதுவரை சொல்லவில்லை,எனக்கு வர வேண்டிய மாப்பிள்ளை இப்படிதான் இருக்கனும்எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்திருக்கிறார் த்ரிஷா. அதுபோல் தனக்கு வரும் கணவர் பிடித்தவராக இருக்க வேண்டும். என்னையும் அவருக்கு பிடித்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து அன்பை சமமான முறையில் பங்கிட்டு கொள்ள வேண்டும்.,கருத்து வேறுபாடு புற்று நோய் போன்றது. எனவே நான் விவாகரத்து செய்ய மாட்டேன். எனக்கு பிடித்த கணவரை தேடிக்கொண்டிருப்பேன். அந்த காலம் வரும் என்று கூறியுள்ளார்.,அதேபோல் சூர்யா என்ற நபர் ஒருவர் த்ரிஷா நான் தாலி கட்டிய மனைவி. அவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்று லூசு தனமாக பேசியிருந்தார். அதைப்பற்றி த்ரிஷா கண்டுகொள்ளவே இல்லை.,இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.