கவர்ச்சி நடிகையின் மறுபக்கத்தை பகிர்ந்த பயில்வான் : விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு...!
தமிழ்நாடு ரசிகர்களின் மனம் கவர்ந்த டிவி சீரியலாக இருந்த சித்தி என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றார். ஷங்கரின் பாய்ஸ் படத்தில் விபச்சாரியாக சிறிய காட்சியில் தோன்றி பிரபலமானவர். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து கொடிகட்ட பறந்த இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து புவனேஸ்வரி தற்போது துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளார்.
இதையடுத்து புவனேஸ்வரியின் மறுபக்கம் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.
"கவர்ச்சியின் பிம்பமாக இருந்தவர் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூட இவரை அழைத்தார்கள். டிவி, சினிமா என்று ஒரு ரவுண்ட் வந்தார்.
இவர் மீது விபச்சார வழக்கு தொடரப்பட்ட கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்து வழக்கை எதிர்கொண்ட புவனேஸ்வரி தான் நிரபராதி என நிருபித்தார். ஆனால் அது பற்றி யாரும் பெரிதாக செய்திகள் வெளியாகவில்லை.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சேதுராமனின் தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவரை பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்தது.
டிவி சீரியில் சிரமம்பட்டு நடிகையாக வந்த இவர், பின்னர் சினிமாவுக்கு வந்தார். அவருக்கு சென்னையில் மூன்று, நான்கு பங்களாக்கள் இருக்கிறது. இவை அனைத்து ஷுட்டிங் பங்களாவாக இருக்கிறது. தனது பழைய வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு சாமியாரினியாக வாழ்ந்து வருகிறார். அதாவது துறவி வாழ்க்கை வாழ்கிறார்.
இந்த துறவி வாழ்கைக்கு இவர் தான் முன்னோடி இல்லை. பரசக்தி படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த நடிகையான பண்டரி பாய், திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தார். அவர் வடபழனியில் பண்டரிநாதன் என்ற கோயிலை நிறுவி தனது வருமானம் முழுவதையும் கோயிலுக்காக செல்வு செய்தார்.
இவரை போல் கலர் காஞ்சனா என்று அழைக்கப்பட்ட நடிகை காஞ்சனா, ஸ்ரீதரால் அறிமுகப்பட்ட நடிகையாக உள்ளார். கோவயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து, கணவர் இறந்த பிறகு சட்ட போராட்டத்தால் சொத்துக்களை பெற்றார். பின்னர் அவற்றை திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்.
இவர்களின் வரிசையில் தற்போது புவனேஸ்வரி வாழ்ந்து வருகிறார். தினமும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் அன்னதானமாக உணவு அளிக்கிறார். அதேபோல் கோயம்பேடில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோயிலில் அன்னதானம் செய்கிறார். இது இல்லாமல் தீபாவளிக்கு 10 ஆயிரம் ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை போன்றவற்றை தானமாக அளித்துள்ளார். தனக்கு இருக்கும் ஷுட்டிங் பங்களாவை வாடைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் தனக்கு போக மீதத்தில் தானம் செய்து வருகிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நடிகைகளுக்கு கூட இந்த எண்ணம் வராது. இந்த மாற்றம் குறித்து நான் சங்கரன்கோயிலில் வாழ்ந்தபோது சாப்பாட்டுக்கு இல்லாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு வசதி வரும்போது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்கிறார்.
எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் கொடை தன்மையுடன் இருந்ததால் தான் இறந்த பிறகும் பேசப்படுகிறார்கள். புவனேஸ்வரி செய்து கொண்டிருக்கும் கொடைகளை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. வளசரவாக்கம், கோயம்பேடு கோயில்களுக்கு சென்றால் இது நடப்பதை நீங்களே நேரில் பார்ப்பீர்கள். அதேபோல் என்னுடைய வருமானத்தை எனக்கு பின்னால் யாரும் அனுபவிக்கப்போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார் புவனேஸ்வரி" என்று கூறியுள்ளார்.
துறவற வாழ்க்கை வாழ்ந்து வருவது பற்றி புவனேஸ்வரி கூறும்போது, "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக என் மனதில் மாற்றம் எழுந்து நிலையில் ஆன்மிகத்தின் பக்கம் எனது பாதை மாறி உள்ளது. எனது வாழ்க்கையின் மீதி காலத்தை இறை பணிக்கு அர்ப்பணிக்க உள்ளேன்.
எனது உடலையும் மனதையும் இறைவனுக்கு கொடுத்து விட்டேன். முழு மனதுடன் துறவறம் ஏற்றுக் கொள்கிறேன். காசிக்கு சென்று சித்தி பெற்று உள்ளேன். நான் போகாத கோயில்களே கிடையாது. தேவாலயங்கள் பள்ளிவாசல்களுக்கும் சென்று வருகிறேன். ஆன்மிகப் பணிக்கு மதம் தடை கிடையாது. சிறுவயதில் பசி காரணமாக நான் பல நாட்கள் பட்டினி கிடந்து இருக்கிறேன். அந்த நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தினமும் 300 பேருக்கு உணவு அளித்து வருகிறேன்" என்றார்.