லியோ படத்தை விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்! விறுவிறுப்பு இருக்கு பரபரப்பு இருக்கு ஆனால்...

 
1

தளபதி விஜய், த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த லியோ படம் நேற்று உலகெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்நிலையில் லியோ படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார். அதில், லியோ  படம் கிட்டத்தட்ட பாட்ஷா படம் போலத்தான் இருக்கு.

பாட்ஷா படத்தில் தாதாவாக இருந்த ரஜினி, சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்தாரே அதைப்போலத்தான் லியோ படத்திலும் காஷ்மீரில் இரண்டு குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளார் விஜய். த்ரிஷாவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் இழுத்து போத்திக் கொண்டு சாதாரணமாக நடித்துள்ளார். த்ரிஷாவின் கவர்ச்சி இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மற்ற திரைப்படங்களை விட இந்த திரைப்படத்தில் விஜய் அட்டகாசமாக நடித்து இருக்கிறார். ஒவ்வொரு சண்டை காட்சியில் வித்தியாச வித்தியாசமாக இருப்பதால், விஜய்க்கு ஒரு கம்பீரம் கிடைத்து இருக்கிறது. இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோ  என்கிற சிம்மாசனத்தில் கம்பீரமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறார் விஜய்.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், தனது புத்திக் கூர்மையை அதிகமாகவும், ஆழமாகவும் பயன்படுத்தவில்லை. Screen Play நன்றாக இருந்தாலும், புதுமையாக இல்லை, விறுவிறுப்பு இருக்கு பரபரப்பு இருக்கு ஆனால், எந்தக்காட்சியும் புதுமையாக இல்லை என்பது லியோ படத்தின் மிகப்பெரிய குறை தான். இந்த படத்தை நம்மை உங்காத்து பார்க்க வைத்ததே சண்டை இயக்குநர் அன்பறிவு தான். சண்டை படம் உங்களுக்கு பிடிக்குமா கண்டிப்பா LEO படம் உங்களுக்கு பிடிக்கும்.

From Around the web