இந்தியன் 2 படத்தை விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதன்..! நல்லா இல்லாத படத்தை எப்படிங்க...
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும் தற்போது இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் ,பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இந்தியன் 2 படத்தைப் பற்றி பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இந்தியன் 2 படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை தான். நல்லா இல்லாத படத்தை எப்படிங்க நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். நான் நிறைய பேரை பாராட்டி எழுதியிருக்கின்றேன். அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. விமர்சனம் எழுதுபவர்களை திட்டாதீங்க. இதை நான் ஒரு எச்சரிக்கையாக சொல்லுகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.