மீண்டும் பிரபல நடிகையை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்..!  

 
1

விஷால் நடித்த ’ரத்னம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பயில்வான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ’பிசாசு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பாலா அவருக்கு பல்பு கொடுத்தார் என்பதும் ரேகா நாயர் உள்பட பலர் அவரிடம் நேரிடமே நேரடியாக சண்டைக்கு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பயில்வான் ரெங்கநாதனுடன் நேருக்கு நேர் உரையாடிய ஷகிலா, அவரது மகள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தபோது பயில்வான் டென்ஷனாகிவிட்டார். உங்கள் குடும்பத்தை இழுத்த போது உங்களுக்கு எப்படி கோபம் வருகிறது, அதே போல் தான் நடிகைகளுக்கும் இருக்கும் என்று கன்னத்தில் அறைவது போல் ஷகிலா கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை பல செலிபிரிட்டிகள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர். ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுகின்றனர். முக்கியமாக ரேகா நாயர் நேரடியாக சண்டைக்கே சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இத்தனை அவமானம் அடைந்து பயில்வான் ரங்கநாதன் ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். சமீபத்தில் சென்னைக்கு ஜோதிகா ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் விளம்பரத்திற்காக வந்த போது அவர் பேசியது குறித்து பயில்வான் கிண்டல் அடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய வீடியோவில் ஜோதிகா குறித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த வீடியோவில் பேசிய அவர், "ஜோதிகா போதையில் ஏதும் உளறினாரா என்று தெரியவில்லை. படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் பேட்டியும் கொடுத்துவிட்டு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார். ஜோதிகாவுக்கு சென்னை என்றால் வேப்பங்காய் என்று முன்பே நான் சொன்னேன். இப்போதும் சென்னை வந்த அவர் தனது மாமனார், மாமியாரை பார்க்கவில்லை. அவர்களது முகத்தில்கூட முழிக்கக்கூடாது என்றுதான் மும்பைக்கே சென்றுவிட்டார்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/bayilvan-ranganathan-open-talks-about-jyothika-family-issue-132813.html எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக பேசி வருவதை அடுத்து அவர் திருந்தவே மாட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

From Around the web