வளைகாப்பில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ‘பாக்கியலட்சுமி’புகழ் ஜெனிஃபர்..!!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் சமீபமாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. சதீஷ், சுசித்திரா, விஷால் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த தொடரில் ஜெனிஃபர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவருடைய ராதிகா என்கிற கதாபாத்திரத்திற்கு பெரிய ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில் சில தனிப்பட்ட காரணங்களினால் அந்த தொடரில் இருந்து அவர் விலகிவிட்டார். 

1

இந்நிலையில், ஜெனிபரின் வளைகாப்பு விழா சென்னையில் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.அதில் அவரது கணவர் முதலில் ஆட வேண்டாம் என சொல்கிறார். அதன் பின் இருவரும் இணைந்து நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் ஜெனீபரின் ஆட்டத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

ஜெனிபர் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

From Around the web