ரிலீஸான சில நாட்களில் ஓ.டி.டி-க்கு வந்த அரண்மனை 3..!

 
அரண்மனை 3

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர். சி இயக்கத்தில் திகில் கலந்த காமெடி சிரீஸில் வெளியான படம் ‘அரண்மனை 3’. முன்பாக இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெற்றன. அதனால் இதனுடைய மூன்றாவது சிரீஸையும் காமெடி கலந்த திகில் பின்னணியில் இயக்கினார் சுந்தர். சி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றாலும், தயாரிப்பு நிறுவனம் இப்படம் வெற்றி படம் என்று தகவலை தெரிவித்தது.

இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜீ5 ஓடிடி தளத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ ஆகிய படங்களும் வெளியாகியுள்ளது. 

From Around the web