விவேக் படத்துடன் அரண்மனை 3 பட போஸ்டர் வெளியீடு..!

 
விவேக் படத்துடன் அரண்மனை 3 பட போஸ்டர் வெளியீடு..!

மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள ‘அரண்மனை 3’ படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அரண்மனை , அரண்மனை 2 பட வெற்றியை தொடர்ந்து அதனுடைய மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர். சி. கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், அவருக்கு ஜோடியான ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக், சாக்‌ஷி அகர்வால், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் ஹாரர் கதை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஷுட்டிங் பணிகள் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் சுந்தர் சி, ஆர்யா, விவேக், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web