பனாமா பேப்பர்ஸ் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான உலக அழகி!!

 
1

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பினரும் வெளிநாடுகளில் தங்களது சொத்துகளை பதுக்குவதற்கும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பதுதான் பனாமா நாட்டைச் சேர்ந்த பொன்சேகா நிறுவனத்தின் பணியாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் எல்லாம் பனாமா பேப்பர் என்ற பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஊடகங்கள் வாயிலாக அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் லட்சக்கணக்கான பிரபலங்கள் சொத்துகளை பதுக்கியதும் தெரியவந்தது.

இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆகியோரது பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று மும்பை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் இன்று ஆஜரானார்.  

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.  

இந்நிலையில், நேற்று  டெல்லி ஜாம்நகர் இல்லத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

From Around the web