பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ன் அடுத்த கதைக்களம் அரசியின் கட்டாய திருமணமா..?
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதலாவது பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசப்பந்தத்தை மையமாகக் கொண்டெடுக்கப்பட்டது. தற்போது இதன் இரண்டாவது பாகம் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாச பந்தத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் பாண்டியனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களோடு ஒரு மகளும் உள்ளார். மூன்று மகன்களும் திருமணம் செய்து தமக்கு ஏற்ற துணையை தேடிக் கொண்டார்கள். அதில் சரவணனுக்கு மட்டும் தான் பாண்டியன் பார்த்த பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. ஆனாலும் அவர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெட்ட வெளிச்சமாகவில்லை.
இந்த நிலையில், தற்போது பாண்டியனின் மகளுக்கும் திருமணம் நடைபெற்று உள்ளதாக சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது பாண்டியனின் மகளாக அரசி கேரக்டரில் நடிக்கும் நடிகை கழுத்தில் தாலியுடன் உள்ள படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் அரசி யாரை திருமணம் செய்து கொண்டார் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏற்கனவே ராஜியின் சித்தப்பாவின் மகன் அரசியை திருமணம் செய்வதற்கு பிளான் பண்ணி இருந்த நிலையில் தற்போது அவரைத்தான் அரசி திருமணம் செய்து கொண்டாரா? இல்லை இது கட்டாய திருமணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன. எனவே இனிவரும் எபிசோட்களில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.