பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நடித்த புதிய திரைப்படம்! லீக்கான மாஸ் காட்சி..!
2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 ஆண்டுகளை கடந்து அக்டோபர் மாதத்திலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இத் தொடரின் இரண்டாவது பாகமும் அக்டோபர் மாதமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசன் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக கொண்டு எடுத்துள்ளார். இதன் இரண்டாவது சீசனின் கதைக்களம் முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த சீரியலில் ஆகாஷ் பிரேம்குமார், கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஹேமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆகாஷ் பிரேம்குமார் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
குறித்த புகைப்படம் ஆகாஷ் பிரேம்குமார் நடித்த புதிய படம் பற்றியே காட்டப்படுகிறது. அதற்காக அவர் காத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்,