காலில் காயத்துடன் போட்டோ போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தால் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் சரண்யா தொரட்டி.

இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நாகராஜுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்பு நீண்ட காலமாக சீரியல் பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் தற்போது சரவணனுக்கு மனைவியாக பாண்டியனின் மூத்த மருமகளாக மொத்தத்தில் இந்த குடும்பத்திற்கு வந்த வில்லியாக கலக்கி  வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் காயம் ஏற்பட்டது போலவும், ஹாஸ்பிடலில் இருந்தது  போலவும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சரண்யா தொரட்டி.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என கேட்டு வருவதோடு, அவர் விரைவில் மீண்டு வருவதற்கு தமது பிரார்த்தனைகளையும் முன்வைத்து வருகின்றார்கள்.

From Around the web