பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்..!

 
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றன. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.

முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ‘லட்சுமி’ கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. அந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் இறந்துபோனது போல சமீபத்தில் காட்டப்பட்டது. இது தொடரை பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில் நடிகை ஷீலா பாக்கியலட்சுமி தொடரில் இணைந்துள்ளார். ராதிகாவின் அம்மா வேடத்தில் இனிமேல் அவர் நடிக்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 

From Around the web