‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சர்ச்சை பேட்டி..! பீரியட்ஸ் இருந்தாலும் கோவிலுக்கு போவேன்..! 

 
1
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், முதல் சீசனில் நடித்தவர்களில் ஒருவர் விஜே தீபிகா. இவர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் கடைக்குட்டி சரவணன் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவரது கேரக்டரில் சாய் காயத்ரி என்பவர் நடித்து வந்தார் என்பதும் ஆனால் அவரும் சில நாட்களில் இந்த சீரியலில் இருந்து விலகியதால் மீண்டும் விஜே தீபிகா ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அதே கேரக்டரில் இணைந்தார் என்பதும் பலரும் அறிந்ததே. மேலும் சரவணன் விக்ரம், விஜே தீபிகா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜே தீபிகா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது வெள்ளிக்கிழமை என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன், எல்லா நாட்களிலும் நான் அசைவம் சாப்பிடுவேன், அதேபோல் கோவிலுக்கு பீரியட்ஸ் டைமிலும் நான் செல்வேன், சாமி கும்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பீரியட்ஸ் டைமில் நான் பூஜை ரூமுக்கு கூட செல்வேன், என்னை பொருத்தவரை என்னுடைய சாமி அய்யனார் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் என்னை ஏற்றுக் கொள்வார்,  என்னை எந்தவிதத்திலும் ஒதுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.  எனவே பூஜை அறைக்கு நார்மலான நாட்களில் செல்வது போன்றே பீரியட்ஸ் நாட்களிலும் செல்வேன், விபூதி குங்குமம் எடுத்துக் கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ’நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று யாருக்கும் சொல்வதற்கு உரிமை இல்லை, நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பீரியட்ஸ் நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன் என்பதை பலர் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டாலும் சிலர் அவரது கருத்துக்கு நெகடிவ் கமெண்ட்ஸ்களையும் சிலர் பதிவு செய்து வருகின்றனர். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web