சீரியல் நடிகரை கரம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் நடிகை..!

 
சீரியல் நடிகரை கரம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் நடிகை..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார்.

விஜய் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் டிவி பார்வையாளர்களிடம் மிகவும் பிரபலம். இந்த சீரியலில் ஜீவாவின் மனைவியாக வரும் மீனா கதாபாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் கவிதா கவுடா. சில மாதங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அதை தொடர்ந்து தான் ஹேமா மீனா கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து பல்வேறு தமிழ் குடும்பங்களில் மீனாவாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்தளவுக்கு அனைவருடைய மனங்களிலும் மீனாவாக கச்சிதமாக பொருந்திவிட்டார் ஹேமா.

இந்நிலையில் முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவிதா கவுடாவுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. கன்னட சீரியல்களில் பிரபலமாக நடித்து வரும் சந்தன குமார் என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார்.

பல்வேறு கன்னட ஊடகங்களில் இவருடைய திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேனா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறா கவிதா கவுடா.
 

From Around the web