பிரபலமான சீரியலில் இருந்து விலகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா..!

 
வெங்கட் ரங்கநாதன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் பிரபலமான ஒரு சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த வெங்கட், சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவருடைய நடிப்பில் வெளியான ஆண் பாவம், புகுந்த வீடு, மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

எனினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க துவங்கிய பிறகு தான் வெங்கட் மேலும் பிரபலமானார். அதே சீரியலுடன் சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ என்கிற சீரியலில் அஸ்வின் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தற்போது சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், சீரியலில் இருந்து விலகுவது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம், ஆனால் என்னை மன்னிக்கவும். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா-ஆக என்னை பார்க்கலாம் என்று வெங்கட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web