விரைவில் விடைபெறும் பாண்டியன் ஸ்டோர்ஸ்- நடிகர் வெங்கட் தகவல்..!!

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் நிறைவுபெறவுள்ளதாக நடிகர் வெங்கட் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
 
venkat renganathan

மிகவும் எதார்த்தமான ஒரு கூட்டுக் குடும்பக் கதையாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முக்கியமான ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார். தற்போது இவரைச் சுற்றி தான் கதை சென்றுகொண்டிருக்கிறது. 

விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் கிழக்கு வாசல். நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க சஞ்சீவ் கமிட்டாகி இருந்தார்.

முதல் நாள் சீரியல் படப்பிடிப்பின் போது அவர் பங்கேற்ற புகைப்படங்கள் கூட வெளியாகின. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாவதற்கு முன்பே அந்த தொடரில் இருந்து சஞ்சீவ் வெளியேறிவிட்டார்.

pandian stores

தற்போது அவருக்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் வெங்கட் ரங்கநாதம் கமிட் செய்யப்பட்டு நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது, வேறொரு சீரியலில் அவர் எப்படி ஹீரோவாக நடிக்க முடியும் என்கிற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள வெங்கட், வரும் ஜூன் மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையவுள்ளது. அதற்கு பிறகு, அதே நேரத்தில் கிழக்கு வாசல் ஒளிப்பரப்பாகிறது. இதனால் பாண்டியன் ஸ்ட்ரோஸ் முடிவதற்கும், புதிய சீரியல் துவங்குவதற்கும் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

From Around the web