சந்தோஷமான தகவலை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷீலா..!
 

 
நடிகை ஷீலா

அண்மையில் யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை ஷீலா மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டி.ஆர்.பி அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதை தூக்கி நிறுத்துவதற்கு தான் நடிகை ஷீலாவின் கதாபாத்திரம் இறந்துபோனது போல காட்டப்பட்டதாக கூறப்படுகின்றன. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தாயார் லக்ஷ்மி அம்மாள் ஒருநாள் இறந்துபோன சம்பவத்தை ஒரு வாரம் வரை ஒளிப்பரப்பானது. இதனால் பார்வையாளர்களுக்கு மேலும் அதிருப்தி தான் ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தாயார் இறந்துவிட்டதாக காட்டப்பட்டுள்ளது சீரியல் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் யு-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து கவலை தெரிவித்தார் ஷீலா. இது அந்த தொடரை பார்த்து வரும் ரசிகர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் சரண்யா துராடி நடிக்கும் புதிய சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதில் கதாநாயகிக்கு அம்மாவாக ஷீலா நடிக்கிறார். இந்த தகவலை அவரே அந்த பேட்டியில் குறிப்பிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From Around the web