பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் திடீர் மாற்றம்..! இனி இவருக்கு பதில் இவர்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, பாண்டியன் கேரக்டரிலும்,அவரது மனைவி கேரக்டரில் நடிகை நிரோஷாவும் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் ஆகாஷ் பிரேம்குமார், கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஹேமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வசந்த் வசி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
இனி அவருடைய கேரக்டரில் வெங்கட் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்திருந்தார். மீனா மற்றும் ஜீவாவிற்கு அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் உண்டு. அதனால் இணையத்தில் இவர்கள் இருவருக்கும் பேன்ஸ் பேஜ் அதிகமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்2 சீரியலிலும் மீனாவாக ஹேமா நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் அதே பழைய வெங்கட் மீண்டும் அறிமுகமாகிறார். இவர்கள் இருவருடைய காம்போவால் இனி டிஆர்பி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.