பாபநாசம் 2- கமல்ஹாசன் திட்டம்..!

 
விரைவில் உருவாகும் பாபநாசம் - 2

த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தை ஓரே மாதத்தில் எடுத்து முடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவுச் செய்தது. அதை தொடர்ந்து தற்போது தெலுங்கும் அதே பெயரில் தயாராகி வருகிறது. மலையாளப் பதிப்பை போல தெலுங்கு ரீமேக் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்து முடித்துள்ளார். மேலும் நதியா, பூர்ணா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தையும் ஜீத்து சோப் தான் இயக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து விரைவில் இந்த படம் தமிழிலும் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள கமல், அதற்கு பிறகு இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்காக காட்சிகளை ஓரே மாதத்தில் முடித்துக் கொடுக்கவும், முதல் பாகத்தை இயக்கியே ஜீத்து சோப் இரண்டாவது பாகத்தையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாபநாசம் படத்தின் முதல் பாகம் உருவாக்கப்பட்ட போது கமல்ஹாசன் மற்றும் கவுதம் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

படம் வெளியான சில மாதங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கவுதமி நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தொழில்ரீதியாக கமல்ஹாசன் மற்றும் கவுதமி இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

From Around the web