பறந்து போ படத்தின் டீசர் வெளியீடு..!

’ராம்’ இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ‘பறந்து போ’ என தலைப்பிட்டுள்ளனர். முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார் ராம்.
செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள "பறந்து போ" திரைப்படத்தின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் பறந்து போ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தை இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று வரும் அப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.