அரசியல் பிரபலத்தை கரம்பிடிக்கும் ப்ரியங்கா சோப்ராவின் தங்கை..!!
 

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் பரினீதி சோப்ராவுக்கும் டெல்லி மக்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
 
parineeti chopra

இந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சித்தி மகள் தான் பரினீதி சோப்ரா. இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பாய்’ என்கிற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘இஷ்குசாதே’ திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை வரிசைக்கு வந்தார். தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வரும் பரினீதி, டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ சத்தாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

இருவரும் சேர்ந்து மும்பை மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் ஊர் சுற்றும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின. இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 13-ம் தேதி பரினீதி மற்றும் ராகவ் சத்தாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

மிகவும் எளிமையாகவும் தனிப்பட்ட முறையிலும் நடந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். விரைவில் இவர்களுடைய திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web