திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பார்க்கிங் படம் ஓடிடியில் ரிலீஸ்..! 

 
1

கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பார்கிங்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டின் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படங்கள் பட்டியலில் ‘பார்கிங்’ படமும் இணைந்தது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் பட்ஜெட்டை தாண்டி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஈகோ’வால் நடக்கும் சம்பவங்களையும் மனித மனங்களில் அகம்பாவத்தையும் பதிவு செய்த விதத்தில் படம் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web