22 வருடம் கழித்து ரீ-ரிலீஸாகும் பார்த்திபன் -  தேவயானி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்..! 

 
1

தமிழ் சினிமாவுக்கு "தொட்டா சிணுங்கி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி. இவர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவ்வாறு இவர் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சூரிய வம்சம் திரைப்படத்தின் காட்சிகளே இவரை இன்றளவிலும் மீம்ஸ் , ரீல்ஸ் என ட்ரெண்டிங்கில் வைத்துள்ளது. 

அதுபோல பார்த்திபன் மற்றும் தேவயானி இணைந்து நடித்து மாபெரும் வெற்றி அளித்த திரைப்படமே  "அழகி" ஆகும். இது தற்போது தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக தேவயானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் " 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி அது தற்போது 22 வருடம் கழித்து ரீ ரிலீஸாக உள்ளது. இது பெரிய ஒரு ட்ரெண்ட்செட்டிங்  பிலிம் , எனக்கு கல்யாணம் ஆன பிறகு ரிலீஸ் ஆனா முதல் படம் இது. இதன் இயக்குனர் "தங்கர் பச்சன்" மிகவும் சிறந்த இயக்குனர். பார்த்திபன் நல்ல நடிகர் , என்னோட சினிமா பயணத்துல "அழகி" முக்கியமான திரைப்படம் " என அவர் கூறிய காணொளி வைரலாகி வருகின்றது.

From Around the web