வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த பார்த்திபன்! சீதாவை பற்றிய அந்த செய்தி பொய்.. நான் பேசிய விஷயமே வேறு..!

80ஸ் காலகட்டத்தில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்து நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திரைப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்காக சீதாவிடம் நடிக்க கேட்டபோது முதலில் சீதா இவருக்கு சம்மதிக்கவில்லை. காரணம் பார்த்திபன் அறிமுக இயக்குனராக இருக்கிறார் அவருடைய திரைப்படத்தில் நடித்தால் சரிப்பட்டு வருமா என்று யோசித்து இருக்கிறார். ஆனால் சீதாவின் பெற்றோர் தான் அந்த திரைப்படத்தின் கதைக்காக வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் சீதா, பிரபு ரஜினி போன்ற முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் பார்த்திபன் படத்தில் நடிக்க வேண்டுமா? என்று யோசித்து இருக்கிறார். பிறகு அந்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதும் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இவர்களுடைய காதல் விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததும் சீதா குடும்பத்தினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இதனால் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறிதான் சீதா பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பார்த்திபன் சீதா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வர இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். ஆனால் விவாகரத்திற்கு பிறகு எந்த இடத்திலும் இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பேசியது கிடையாது.
எந்த பேட்டிகளில் பார்த்திபன் பேசும்போதும் சீதா குறித்து பேசும் போது, எங்களுடைய பிரிவிற்கு காரணம் காதல்தான். ஒருவர் மீது நாம் அதிகமான காதல் வைத்திருக்கும் போது அவர்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறோம். அது தவறு என்பது அந்த நேரத்தில் புரியாது. அது போல தான் நான் ஆரம்பத்தில் நடந்து கொண்டேன்.
இப்போ இருக்கிற மெச்சூரிட்டி எனக்கு ஆரம்பத்தில் இருந்திருந்தால் சீதா நடிக்க போறேன் என்று சொன்னபோது தாராளமா போயிட்டு வாமா என்று அனுப்பி வைத்திருப்பேன். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையில் என்னால் இதுபோன்ற மனநிலையில் இருக்க முடியவில்லை. இதனால் தான் எங்களுக்குள் பிரிவு வந்தது என்று பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
ஆனால் பார்த்திபன் சொன்ன விஷயத்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சீதா பற்றி தவறாக வதந்திகள் பரவி இருக்கிறது. அது குறித்து சமீபத்தில் பார்த்திபன் சாய் வித் சித்ராவில் நடிகர் சித்ரா லட்சுமணனிடம் பேசும் போது விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சீதாவை பற்றி சில மாதங்களுக்கும் முன்பு ஒரு வதந்தி பரவியது. அது முழுக்க தப்பு. நான் சீதாவை பற்றி இதுவரைக்கும் எந்த இடத்திலும் தப்பா சொன்னது கிடையாது.
சொர்ணமுகி திரைப்படத்தில் உள்ள காட்சிகளை பற்றி சொல்லி இருந்தேன். அந்த படத்தில் கதாநாயகி தேவயானி மனதில் பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் அதனால் தேவயானி இடம் நான் வில்லனாக நடந்து கொண்டு அவர் என்னை வெறுக்கும்படி செய்துவிட்டு நான் பிரிந்து வந்து விட்டேன் என்று சொல்லி இருந்தேன். அதை இரண்டையும் சேர்த்து செய்தி பரப்பி விட்டார்கள்.
அதனால் சீதா ரொம்பவும் கஷ்டப்பட்டார். நான் சீதா மனதில் இன்னொருவர் இருப்பதை தெரிந்து விட்டேன் பிரிந்து விட்டேன் சொன்னது போல செய்திகள் பரவியதால்தான் சீதா வருத்தப்பட்டார். ஆனால் உண்மை அப்படி கிடையாது. இதை இந்த இடத்தில் நான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இதுவரைக்கும் எந்த இடத்திலும் சீதாவை தவறாக பேசியது கிடையாது என்று அந்த பேட்டியில் பார்த்திபன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதுபோல அதே நிகழ்ச்சியில் சீதா பற்றி பேசும்போது எங்களுக்குள் இப்போதும் அதே மரியாதை, அன்பு இருக்கிறது. திருமண வாழ்க்கையில் சில வருத்தங்கள் மட்டும் இருந்தது ஆனாலும் சீதாவிற்கு மட்டும்தான் மனைவி என்ற அந்தஸ்தை நான் கொடுத்திருக்கிறேன் வேறு யாருக்கும் என்னுடைய வாழ்க்கையில் அந்த இடம் இல்லை என்று பார்த்திபன் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.