இந்தியன் 2 உடன் மோதும் பார்த்திபனின் டீன்ஸ்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன்.
பார்த்திபன் இயக்கத்தில் இறுதியாக வெளியான நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது. தற்போது, சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை 12ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியன் – 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 திரைப்படத்தினைவிட குறைவான திரையரங்குகளில் வெளியாகும் டீன்ஸ் கதை, திரைக்கதையில் நன்றாக இருந்தால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது.