பசங்க 2 புகழ் நடிகை வித்யா பிரதீப் இப்போ என்ன பண்றாரு எங்கே இருக்காரு தெரியுமா ?
2010ஆம் ஆண்டு ’அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை வித்யா பிரதீப், அதன்பின் ’சைவம்’ ’பசங்க 2’ ’அச்சமின்றி’ ’மாரி 2’ ’தடம்’ ’தலைவி’ ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’கண்ணகி’ திரைப்படத்தில் கூட அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவையும் நிறைவேற்றிய நிலையில் தற்போது அவர் டாக்டருக்கு படித்து முடித்து விட்டார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் டாக்டர் பணி கிடைத்துள்ள நிலையில் அங்கு அவர் பணியாற்றி வருகிறார். அவருடைய கணவரும் அங்கேயே செட்டில் ஆகிவிட்ட நிலையில் இனி அவர் நடிக்க மாட்டார் என்றும் அமெரிக்காவில் தனது டாக்டர் பணியை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவரின் பிறந்த நாள் தினத்தில் கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்து 13 வருட அழகான காதல் பயணம் என்று கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.