தன்னை விட 4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ பட நடிகர்..!!

சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பசங்க படத்தில் நடித்த கிஷோர், தன்னை விட வயது மூத்த பீர்த்தி குமாரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
 
pasanga actor

பாண்டி ராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘பசங்க’. விமல், வேகா, செந்தில்குமாரி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் கிஷோர் டி.எஸ் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட சிறுவர்கள் நடித்திருந்தனர்.

புது தில்லியில் நடந்த 57வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த பிராந்திய மொழிப் படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பிரிவுகளில் விருது வென்றது. மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்த கிஷோர் மற்றும் ஸ்ரீராமுக்கு சிறந்த குழந்தைகள் நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

அப்போது சிறுவர்களாக இருந்த கிஷோர் மற்றும் ஸ்ரீராம், தற்போது வளர்ந்து கதாநாயகர்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கிஷோருக்கும் தொலைக்காட்சி நடிகை பீர்த்தி குமார் என்பவருக்கும் திருமணம் நடந்ததுள்ளது. நடிகை பீர்த்தி குமார், வானத்தைப்போல போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

pasanga movie

மேலும் கிஷோரை விடவும், பீர்த்தி குமார் நான்கு வயது மூத்தவர் ஆவார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, தங்களுடைய உறவை உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இன்று திருமணமாகியுள்ளது. புதியதாக இல்லறவாழ்வில் இணைந்திருக்கும் கிஷோர் பீர்த்தி குமாருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே..!
 

From Around the web