வெளியானது ‘பத்து தல’ தீம் பாடல்..!! தெறிக்கவிடும் டிரெண்டிங்..!!

’நெடுஞ்சாலை’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பத்து தல’. ஏ.ஆர். இசையமைப்பில் , ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகிறது 31-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
கடந்த 18-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், பத்து தல படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகின. அப்போது படத்தின் மையப் பாடல் மட்டும் வெளியாகமல் இருந்தது. டிரெய்லரில் இடம்பெற்ற அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
அதை புரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம், ப்ரோமோஷன் பணிகளின் போது பாடலை வெளியிட முடிவு செய்தது. இந்நிலையில் படத்தின் தீம் சாங்கான ‘ஒசரட்டும் பத்து தல’ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.