'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு போட்டியாக வந்த சாயிஷாவின் ’ராவடி’.!!

பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி..’ பாடல் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, நல்ல வரவேற்பை பதிவு செய்து வருகிறது.
 
 pathu thala

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இதில் இடம்பெற்றிருந்த ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற பாடல் தேசியளவில் ஹிட் அடித்தது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் புஷ்பா படம் வெளியானது. 

அனைத்து மொழிகளுக்கும் ஏற்றவாறு ‘ஓ சொல்கிறா மாமா’ பாடல் தயாரிக்கப்பட்டு வெளியானது. எல்லா பதிப்புகளுக்குமே சிறப்பான வெற்றி கிடைத்தது. உச்சக்கட்ட கிளாமர், அங்கம் அசைவு கொண்ட நடன என சிறப்பாக அந்த பாடல் தயாரிக்கப்பட்டு இருந்தது. இன்றளவும் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே கிறக்கம் உள்ளது.

அதற்கு சற்றும் குறைவில்லாத அம்சங்களுடன் தயாராகியுள்ளது பத்து தல படத்தின் ‘ராவடி’ பாடல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார், சுபா மற்றும் நிவாஸ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா சிஹெல் நடனமாடியுள்ளார்.

திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு, அவர் நடித்துள்ள முதல் படம் தான் ‘பத்து தல’. இந்த பாடலில் அவருடன் குக் வித் கோமாளி புகழ் முத்துக்குமார், சமூகவலைதள பிரபல ஸ்னாசி தமிழச்சி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இது பாடலை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

’ராவடி’ என்று தலைப்பல் வெளியாகியுள்ள இப்பாடல் சமூகவலைதளத்தில் வெளியான ஒரு மணிநேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஓ சொல்றியா மாமா பாடலுக்கு இணையான வரவேற்பை இந்த பாடல் பெறும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்பு, கவுதம் கார்த்தி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. 
 

From Around the web