பத்து தல செகண்டு சிங்கிள்- நல்ல செய்தி கூறிய ஏ.ஆர். ரஹ்மான்..!!
 

பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘நினைவிருக்கா’ என்கிற பெயரில் தயாராகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அவருடைய மகன் அமின் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர்.
 
பத்து தல செகண்டு சிங்கிள்

சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீடு குறித்து ஏ.ஆர். ரஹ்மான் இடம்பெற்றுள்ள ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியன், குஷி, கில்லி, ரன், வேதாளம் போன்ற பல்வேறு மெகா ஹிட் படங்களை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம். இவருடைய மூத்த மகன் கிருஷ்ணா, தமிழில் லேசா லேசா, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்து தல’.

கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ‘பத்து தல’ படத்தின் ’நம்ம சத்தம்’ என்கிற பாடல் வெளியானது. இந்நிலையில் ‘நினைவிருக்கா’ என்கிற பெயரில் தயாராகியுள்ள இபப்டத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ படக்குழு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு பத்து தல இரண்டாம் சிங்கிள் ‘நினைவிருக்கா’ பாடல் வெளிவர உள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் இயக்குநர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.
 

From Around the web