நள்ளிரவில் 'பத்து தல' படத்தின் பாடல் வெளியீடு..!!

 
1

'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

From Around the web