கோவா திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம்..!

 
கூழாங்கல்

கோவாவில் விரைவில் துவங்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சேர்ந்து தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. இந்த படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க இந்திய சார்பில் போட்டியிடவுள்ளது.

நாட்டின் உயரிய திரைப்பட விழாவாக கருதப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா வரும் 20-ம் தேதி துவங்குகிறது. அந்த நிகழ்வில் திரையிடுவதற்கு ‘கூழாங்கல்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் 20 குறு மற்றும் ஆவணப்படங்களும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web