மீண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் கூழாங்கல்..!
 

 
கூழாங்கல் திரைப்படம்

நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் மோலோடிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவுள்ளது.

பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். குடிகார தந்தைக்கும் அவருடைய மகனுக்குமான உறவை பற்றிய பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது.

முன்னதாக புகழ்பெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் பங்கேற்றது. அங்கு பல்வேறு முக்கிய பிரிவுகளில் கூழாங்கல் படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இதன்மூலம் இந்தியளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவிலும் கூழாங்கல் படம் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 29-ம் தேதி துவங்கப்பட்டுள்ள இவ்விழாவில் ஜூன் 6-ம் தேதி வரை கூழாங்கல் படம் திரையிடப்படவுள்ளது.
 

From Around the web