மக்கள் அதிர்ச்சி..! ரூ. 250 வரை எகிறும் திரைப்பட டிக்கெட்டின் விலை?? 

 
1

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். அதில் மிக முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியேட்டர் டிக்கெட்டை உயர்த்த வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்க வைக்கப்பட்டது. ஆனாலும் ஏனைய மாநிலங்களில் உள்ளதைப் போல 24 மணி நேரமும் திரையரங்குகளில் படத்தை திரையிட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அதன்படி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக, திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து பத்து சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும்.. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு டிக்கெட் ஆன்லைன் விலை 250 வரையும், ஏசி தியேட்டர்களுக்கு ரூபாய் 200 கட்டணமும், ஏசி இல்லாத தியேட்டர்களுக்கு 150 ரூபாவும் நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் பிற மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உண்டு. அதே போல தமிழ்நாட்டிலும் அனுமதி தர வேண்டும். இத்தனை காட்சிகள் தான் என்ற கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதிக்க வேண்டும்.

மேலும் ஆபரேட்டர் லைசன்ஸ்சிற்கு  புதிய வழிமுறையை வகுத்து தந்த போதும் அது தெளிவாக இல்லாததால் எந்த பயனும் நாங்கள் அடையவில்லை. எனவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல எளிய முறையில் ஆபரேட்டர் லைசன்ஸ் தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மால்களில் உள்ள திரையரங்குகளில் கமர்சியல் ஆக்டிவிட்டிக்கு அனுமதித்தது போல ஏனைய திரையரங்குகளுக்கும் அனுமதி தர வேண்டும். இறுதியாக மின் கட்டணத்தை பொருத்தவரையில் திரையரங்குகள் எம்.எஸ்.எம்.இ யின் கீழ் வருவதால் அந்த விதிப்படி திரையரங்குகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ்வாறு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டம் இன்றி நடத்த முடியும். தற்போது நாங்கள் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

From Around the web