சென்னை மக்களே.. மாநகராட்சி கமிஷனர் முக்கிய அறிவிப்பு..!

 
கமிஷனர்

சென்னை, தேனாம்பேட்டை கிரியப்ப சாலையில் உள்ள கூவம் ஆற்றை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;

“பல்வேறு இடங்களின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் 570க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.இன்று மாலைக்குள் தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களிலும் தண்ணீர் அகற்றப்பட்டுவிடும். 44 இடங்களில் தற்போது படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். தேவையான குடிநீர், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வைத்து கொள்ளவும். முன்னெச்சரிக்கையாக 44 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன” என அவர் தெரிவித்தார்.

From Around the web