சிறப்பு போஸ்டருடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படக்குழு வாழ்த்து!

 
1

 1993-ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை சிறப்பிக்கும் விதமான அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அஜித் முகத்தில் ரத்தம் வழியும் புகைப்படம் ஒன்றையும், அதையொட்டி, “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும், யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” என எழுதப்பட்டுள்ளது.

அதேபோல ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “32 ஆண்டுகால மன உறுதி, தைரியம், ஒழுக்கம், கண்ணியம் மற்றும் நல்லது, கெட்டது ஆகியவற்றுடன் கோரமான பயணங்களை சந்தித்துள்ள அஜித் இன்னும் பல ஆண்டுகள் புகழ் பெற வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனம் ஈர்த்துள்ள இந்தப் போஸ்டர்களை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web