இறந்துபோன பீட்டர் பால் என் கணவரே கிடையாது- வனிதா அதிரடி..!!

அண்மையில் திடீரென இறந்துபோன பீட்டர் பால் தன் கணவரே கிடையாது, இனி ஊடகங்கள் அவர் தொடர்பான செய்திகளில் தன்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று வனிதா விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
vanitha

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமான வனிதா விஜயகுமாருக்கு, கிராஃபிக்ஸ் கலைஞராக பணியாற்றி வந்த பீட்டர் பாலுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2020, ஜூன் மாதம் வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ஆனால் திருமணமான சில நாட்களில் பீட்டர் பாலை விட்டு வனிதா பிரிவதாக அறிவித்தார். இந்த பிரிவுக்கு பீட்டர் பாலின் குடிப்பழக்கம் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதற்கு மறைமுகமாக இரங்கல் தெரிவித்து வனிதா விஜயகுமார் போஸ்ட் செய்திருந்தார். ஆனால் அவருடைய மறைவு தொடர்பான செய்திகளில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் என்று தான் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன.

இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார், நான் சட்டப்படி பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை. நாங்கள் 2020ல் ஒன்றாக இருந்தோம், அதே ஆண்டு அது முடிவுக்கு வந்துவிட்டது. அவருக்கு நான் மனைவியும் இல்லை, அவர் என்னுடைய கணவரும் இல்லை. நான் சட்டப்படி தனியாக இருக்கிறேன். எனக்கு துக்கம் கிடையாது, மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஊடகங்கள் பீட்டர் பாலை என் கணவர் என்று கூற வேண்டாம் என்று வனிதா தெரிவித்துள்ளார்.
 

From Around the web