இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! பாடகர் வாகீசனுக்கு அடித்த ஜாக்பாட்!

 
1

 டூ கே கிட்ஸ் கொண்டாடும் ராப் பாடகராக இலங்கையை சேர்ந்த வாகீசன் காணப்படுகின்றார்.

இவர் இலங்கையில் ஒரு ஹோட்டல் அறையில் பனியனுடன் இயல்பாக பாடிய மருதமோ எந்தன் காவியமோ.. வள்ளுவனோ நீயும் வாசுகியோ.. அடி தேவதையோ எந்தன் காதலியோ.. அன்ன நடை ஜினுக்கு ஜிங்காரி .. என்ற பாடல் உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் வைரலானது.

கிட்டத்தட்ட இந்த வீடியோவை ஒரு கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளார்கள். அந்தப் பாடலை மக்கள் இந்த அளவுக்கு கொண்டாடிட அவருடைய செந்தமிழ் மொழியும் ஒரு காரணமாக காணப்படுகிறது.

பல ஆண்டுகளாக ராப் என்றாலே இது கலகக் குரல் என்று மட்டுமே கட்டிக் கொண்டிருக்கும் போது வாகீசன் அந்த ராப் இசைக்குள் ஒரு ஆன்மீகத் தமிழை கையாண்டதோடு ஆங்கிலம் கலக்காத செந்தமிழ் சொற்கள் கூடவே காதல் ரசத்தையும் சொட்ட விட்டுள்ளார்.

இதன் காரணத்தினாலே தற்போது அவருடைய பாடல்கள் படுவைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருவதோடு அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தவாறு உள்ளன.

இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல பாடகரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி இலங்கையை  சேர்ந்த ராப் பாடகர் வாகீசனுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் இதன் மூலம் வாகீசனுக்கு விஜய் ஆண்டனி பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதும் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

From Around the web