பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ..!
Sep 27, 2021, 11:49 IST
பிரபல நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் 5 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ளது. இதனுடைய ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் ஒளிப்பரபாகிறது. முந்தைய சீசன்களை போல இப்புதிய சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். ஐந்தவாது சீசனுக்கான போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர்.
ஆனால் அவர்கள் குறித்த தகவல்களை நிகழ்ச்சிக்குழு ரகசியமாக வைத்துள்ளது. எனினும், சமூகவலைதளங்கள் வாயிலாக சிலருடன் விபரங்கள் தெரியவந்தன. ஆனால் அந்த விபரங்களை உறுதி செய்யும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புதிய சீசனுக்கான போட்டியாளர்களாக இவர்கள் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அதில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் உள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் பிரபல தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுடன் மீதமுள்ள போட்டியாளர்களும் அங்கு தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அக்டோபர் 3ம் தேதி தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
 - cini express.jpg)