வைரலாகும் நடிகை ஹன்சிகா காளிகாம்பாள் கோவிலில் வழிபாடு செய்ய்யும் புகைப்படங்கள்..!!
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிசியான திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி பிரபல தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை நடிகை ஹன்சிகா திருமணம் செய்துக்கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் கழித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு நடிகை ஹன்சிகா வந்தார். தமிழில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’ படத்தை நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து தமிழில் 7 படங்களில் கமிட்டாகியுள்ள அவர், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் நடிகை ஹன்சிகா, புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவிலில் இன்று சிறப்பு வழிப்பாடு நடத்தினார். இந்த நிகழ்வின் போது ஹன்சிகாவுடன் இயக்குனர் ஆர் கண்ணனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.