‘பிச்சைக்காரன் 2‘ – ரிலிஸ் தேதி அறிவிப்பு..!!

 
1

விஜய் ஆண்டனி இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளியான படம் ‘பிச்சைக்காரன்‘. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2‘ படத்தை விஜய் ஆண்டனியை இயக்கி, இசையமைத்து, நடித்தும் வருகிறார். இதில் இவருடன் இணைந்து காவியா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஒய். ஜி. மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த பிச்சைக்காரன் 2 படத்தின் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, இப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த கதையில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. மேலும், பிச்சைக்காரன் முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் நிலையில், ‘பிச்சைக்காரன் 2‘ படம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வர இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

From Around the web