இன்று வெளியாகிறது ‘பிச்சைக்காரன்-2’ படத்தின் பாடல்..!!

 
1

2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை விஜய் ஆன்டனியே நடித்து இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் நடிகர் என இருந்த விஜய் ஆன்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

Pichaikkaran2

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். 

இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.  பட வெளியீடு குறித்த அப்டேட் இருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டிருந்தார். பிச்சைக்காரன் 2 ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.


 


மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் பாடல் பிக்கிலி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி  தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியதாக வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கில் விஜய் ஆண்டனியை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் அடுத்த அப்டேட் இன்று வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிடுள்ள ட்விட்டர் பதிவில், “இது சத்யாவோட கை” என எழுதி கோவில் சிலையே நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிகிலி பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலான கோயில் சிலையே பாடல் நாளை வெளியாகும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

From Around the web