கே.ஜி.எஃப் பட சாயலில் பிச்சைக்காரன் 2 டிரெய்லர்- ரசிகர்கள் கருத்து..!!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை பார்ப்பதற்கு கே.ஜி.எஃப் வரிசைப் படங்களின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
vijay antony

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழில் மாபெரும் வரவேற்பை பதிவு செய்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இந்த படம் மெகா ஹிட்டானது. இந்த படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்திற்கான பணிகளில் கடந்தாண்டு களமிறங்கினார் விஜய் ஆண்டனி. அப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, அந்த படத்தை தானே இயக்குவதாகவும் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் முடிவு பின்வாங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 பட டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு, படம் மே 19-ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, அதில் கே.ஜி.எஃப் படங்களின் சாயல் தென்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பலரும் கே.ஜி.எஃப் படத்தின் டார்க் டோனை தேர்வு செய்து படம் எடுக்கின்றனர். ஆனால் எல்லாமே கே.ஜி.எஃப் ஆகிவிடாது. அதை பின்பற்றி வெளியான கப்ஜா உள்ளிட்ட படங்கள் படுதோல்வி அடைந்தன. அந்த வரிசையில் பிச்சைக்காரன் 2 படமும் இடம்பெறக்கூடும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

From Around the web